நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
அஜித்தை நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம்; யாரும் பயப்பட வேண்டாம் என்று அஜித் ரசிகர்களுக்கு டைரக்டர் விஷ்ணுவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் அஜித் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. இந்த விபத்து குறித்த வீடியோவை பலர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ வெளியிடப்பட்ட அன்று ட்விட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட வீடியோ இதுதான்.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், அஜித்தின் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்களோ நாங்கள் அவரை அந்த அளவு நேசிக்கிறோம். படப்பிடிப்பில் விபத்து எதுவும் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ளோம். யாரும் பயப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.