Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

கோர்ட் தீர்ப்புக்கு பிறகே கல்யாணம்! சல்மான் அதிரடி முடிவு!

Salman Khan will marry after Jodhpur, Mumbai court verdictsமான்வேட்டை, வாகன விபத்து வழக்குகளில் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகே கல்யாணம் செய்து கொள்வேன் என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். சல்மான்கானுக்கு 46 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பல பெண்களுடன் அவர் இணைத்து பேசப்பட்ட அவர், நடிகை கத்ரீனா கைப்பை காதலித்து பிரிந்தார். பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கிய சல்மான்கான், 1999ம் ஆண்டு ஜோத்பூரில் நடந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியின்போது மான் வேட்டையாடியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை ஜோத்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதேபோல மும்பையில் 2002ம் ஆண்டு அவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி ஒருவர் இறந்தார். இது குறித்த வழக்கு விசாரணை மும்பை கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், கோர்ட்டுகளில் என் மீது வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் தீர்ப்பு வெளிவந்த பிறகே திருமணம் பற்றி யோசிப்பேன். ஒருவேளை தீர்ப்பு எனக்கு எதிராக வந்தால், நான் சிறை செல்ல வேண்டியது இருக்கும். சிறை சென்றால் வெளிவந்த பிறகே திருமணம் செய்வேன். இரு வழக்குகளில் இருந்தும் விடுதலையாவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனாலும் தீர்ப்பு வெளிவரும் முன்பே நான் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், தீர்ப்பு எனக்கு பாதகமாக அமைந்தால் எனது மனைவி குழந்தையுடன் வந்து என்னை சிறையில் சந்திக்க வேண்டியது இருக்கும். இது நன்றாக இருக்குமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags »
Salman Khan, சல்மான் கான்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

அப்பாவி - salem,இந்தியா
2012-12-27 06:58:38 Report Abuse
 அப்பாவி சார் நீங்க அவ்ளோ நல்லவரா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in