Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

விஜய்யுடன் ஜோடி சேர துடிக்கும் பிந்து மாதவி!

bindu madhavis dreams with Vijayஅமலாபால் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதை அடுத்து இரண்டாம் தட்டு நடிகைகளுக்குகூட விஜய்யுடன் நாமும் டூயட் பாடிவிடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதில் முதல் இடத்தை பிடிப்பவர் பிந்து மாதவிதான். நான் தெலுங்கு படங்களில் நடித்து வந்தபோதே விஜய்யின் தீவிர ரசிகை. அதனால் தமிழுக்கு நடிக்க வந்ததில் இருந்தே அவருடன் எப்படியும் டூயட் பாடி விட வேண்டும் என்ற ஆசை என் மனதில் அலைமோதிக்கொண்டே இருக்கிறது. சட்டம் ஒரு இருட்டறை படத்தை அவரது உறவினர் சினேகா பிரிட்டோ இயக்குகிறார் என்றதும் சம்பளத்தைப்பற்றிகூட பேசாமல் உடனே நான் கமிட்டானதற்கு அதுவும் ஒரு காரணம்.

மேலும், அப்படி அந்த படத்தில் நடித்தபோது, ஒரு நாள் ஸ்பாட்டுக்கு வந்த விஜய், எனது நடனத்தைப்பார்த்து ரொம்பவே ரசித்தார். அதோடு, பிரமாதமாக ஆடினாய் என்றும் கைகுலுக்கினார். அதனால் ஓரளவு விஜய்யை நான் நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன் என்று சொல்லும் பிந்துமாதவி, இப்போது தமிழில் பிசியாக நடித்து வரும் நான், விரைவில் தமிழில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்து விஜய் நடிக்கும் எதிர்கால படங்களில் அவருடன் ஜோடி சேராமல் ஆந்திராவுககு திரும்ப மாட்டேன் என்றும் மனஉறுதியுடன் பேசுகிறார்.

Tags »
bindu madhavi, Vijay, பிந்து மாதவி, விஜய்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

பயில்வான் - mdu,இந்தியா
2012-12-24 14:27:19 Report Abuse
 பயில்வான் என்னே ஒரு உயர்ந்த லட்சியம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Suresh - BLR  ( Posted via: Dinamalar Windows App )
2012-12-24 14:14:35 Report Abuse
Suresh பாழா போச்சி இதூ வேறயா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in