Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஜீவாவுக்கு கதை பண்ணி வைத்திருந்த இயக்குனர்கள் ஓட்டம்!

24 டிச,2012 - 13:44 IST
எழுத்தின் அளவு:

விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் கால்சீட் கிடைக்காத இயக்குனர்கள், அதற்கடுத்தபடியாக இரண்டாம் தட்டு ஹீரோக்களைத்தான் அணுகுவார்கள். அந்த பட்டியலில் இருக்கும் ஆர்யா,விஷால், ஜீவா போன்ற நடிகர்களைத்தான் நாடுவார்கள். அந்த வகையில், கோ படத்துக்குப்பிறகு ஜீவாவின் மீது இயக்குனர்களுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. அதோடு, படாதிபதிகளுக்கும் இவரை நம்பி முதலீடு செய்யலாம் என்றும் துணிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து, சில படாதிபதிகள் தொடர்ந்து கால்சீட் கேட்டு ஜீவாவை முற்றுகையிட்டனர். அவரோ, கோ படத்தையடுத்து நடித்த, முகமூடி வெளியான பிறகு புதிய படங்களில் கமிட்டானால் 3 கோடியாக இருக்கும் படக்கூலியை 5 கோடி ஆக்கலாம் என்ற கணக்கில் கமிட்டாகாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஆனால் முகமூடி பெரிய அளவில் சறுக்கிவிட, ஜீவா போட்டு வைத்திருந்த கணக்கெல்லாம் தப்பாகி விட்டது. அவர் திரும்பிப்பார்த்தபோது, கால்சீட்டுக்காக நின்று கொண்டிருந்த அத்தனை படாதிபதிகளை தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தனர். இருப்பினும் சோர்வடையவில்லை ஜீவா, நீதானே என் பொன்வசந்தம் என்னை காப்பாற்றும் என்னை தில்லாக நின்று கொண்டிருந்தார். ஆனால் வழக்கம்போல் அந்த படமும் ஜீவாவுக்கு பலத்த அடியை கொடுத்திருப்பதால், இப்போது யான் படத்தில் நடித்து வரும் அவரது சம்பளம் 3 கோடியில் இருந்தும் கடகடவென இறங்கி விட்டதாம். அதிகம் பேசினால் படத்திலிருந்தே கடாசி விடுவார்கள் என்று, நீங்களா பாத்து ஏதோ கொடுங்கள் நடித்துவிட்டுப்போகிறேன் என்கிற அளவுக்கு பேசி வருகிறாராம் ஜீவா.

Advertisement
பிசினசிலும் இணைந்த தோழிகள்பிசினசிலும் இணைந்த தோழிகள் போதையிலும் தெளிவாக இருப்பாராம் டாப்ஸி! போதையிலும் தெளிவாக இருப்பாராம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Nayaki
    • நாயகி
    • நடிகர் : கணேஷ் வெங்கட்ராமன்
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :கோவி
    Tamil New Film Savaale Samaali
    • சவாலே சமாளி
    • நடிகர் : அசோக் செல்வன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :சத்ய சிவா
    Tamil New Film Sivappu manidhargal
    • சிவப்பு மனிதர்கள்
    • நடிகர் : ஸ்ரீராம் கார்த்திக்
    • நடிகை : மீனாட்சி சர்கார்
    • இயக்குனர் :அன்பு சரவணன்
    Tamil New Film Chikkikku Chikkikichi

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in