பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்துள்ள சமந்தா, படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும், மனதளவில் நிறைவாக இருக்கிறார். காரணம், ஒவ்வொரு கலைஞர்களுக்குமே தான் சிறுவயதில் அதிகமாக பாதிக்கப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்,. அப்படி எனக்கும் இருந்தது. நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலங்களில் சிலர் என்னை லவ் அப்ரோச் செய்தனர். அதில் ஒருவர் எனக்கு பிடித்து விட, சிலகாலம் நானும் அந்த என்ற மாயையில் விழுந்திருந்தேன்.
ஆனால் நாளடைவில் மாயமாய் வந்த காதலும் மாயமாய் போய் விட்டது. ஆனாலும், இப்போது என் மனம் அதை நினைத்து அசைபோட்டுப்பார்ப்பதுண்டு. விவரமில்லாத வயதில் வந்த காதல் என்றாலும், காதல் விவகாரமானது என்பதால் அதில் அவ்வப்போது மனம் தித்திப்பதுண்டு. அதனால்தான் நீதானே என் பொன்வசந்தம் படத்திலும் அதேபோன்ற வேடம் என்றதும் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன் என்கிறார் சமந்தா. அந்தவகையில் கெளதம்மேனன்தான் தமிழில் என்னை புரிந்து கொண்டு சரியான வேடத்தில் யூஸ் பண்ணியிருக்கிறார். அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர்கள்தான் என்னை படத்துக்குப்படம் சரியான வேடங்களில் யூஸ் பண்ணி வருகிறார்கள். அதனால்தான் தமிழைவிட எப்போதுமே நான் தெலுங்கு சினிமா மீதே அதிக ஈடுபாடாக இருந்து வருகிறேன் என்கிறார் சமந்தா.