Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நாடக நடிகர்கள் உருவாக்கும் சினிமா

Drama artist to direct new movie
சினிமாவில் நாடக கலைஞர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு நாட்களாக உண்டு. அதனால் அதைப்போக்க இப்போது நாடக நடிகர்கள் இணைந்து ஒரு சினிமாவை தயாரித்து வருகிறார்கள். தஞ்சை பகுதியில் உள்ள நாடக கலைஞர்கள் ஒன்றாக இணைந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஸ்ரீவிஸ்கர்மா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு கம்பெனியைத் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் புதுவரவு என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹீரோவாக நடிப்பவர் நாடக உலகம் அறிந்த நடிகரான தஞ்சை சாமி நடிக்கிறார். நாயகியாக தஞ்சை ஜூனியர் புஷ்பா நடிக்கிறார். நாடக இசை அமைப்பாளர் காரை குமார் இசை அமைக்கிறார். பி.ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் பணியாற்றும் அத்தனை பேரும் நாடக கலைஞர்கள்தான். "எங்களாலும் சினிமா எடுக்க முடியும். நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகத்தான் இந்தப் படத்தை எடுக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ராஜேந்திரன்.

Tags »
Drama artist, new movie, நாடக கலைஞர்கள், புதிய படம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in