Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு: கமல்ஹாசன் எதிர்ப்பு

Kamal Hassan against death penalty for rapistsபாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவதற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொ‌டூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தால் தலைநகர் டில்லியே கலவர பூமியாக மாறி இருக்கிறது. சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று டில்லியில் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் இருக்கும் கமல், அதுதொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தமக்கு மிகவும் அவமானமாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவது சரியான வழி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை என்பதே, சட்டரீதியான கொலை என்று கூறியுள்ள கமல்ஹாசன், பாலியல் பலாத்காரம் நடந்த பஸ் என்னுடையது, நடந்த இடம் என்னுடைய தலைநகரம், கற்பழிக்கப்பட்டவர் எனது சகோதரி, கற்பழித்தவர்கள் எனது சகோதரர்கள். இதனால் நான் மிகவும் அவமானப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். ஏற்கனவே தன்னுடைய விரும்பாண்டி படத்தில் மரண தண்டனையை எதிர்க்கும் வகையிலான காட்சிகளை அவர் அமைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags »
Kamal Hassan, கமல்ஹாசன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (22)

raja - qatar,இந்தியா
2012-12-26 12:32:56 Report Abuse
 raja கமல் பொண்ணு சுருதிஹாசன இப்படி கற்பழித்திருந்தால் இந்தாளு இப்படி சொல்லுவானா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vijay - uae,ஐக்கிய அரபு நாடுகள்
2012-12-25 16:29:48 Report Abuse
 vijay யார் என்ன சொன்னாலும் ,எதித்தாலும் மரண தண்டனை கொடுகபடவேடும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வடுவூறான் - Chennai ,இந்தியா
2012-12-25 15:05:58 Report Abuse
 வடுவூறான் பொதுக் கருத்துக்கு எதிராக எதையாவது சொல்லி தன்னை ஒரு அறிவுஜீவியாக காட்டிக் கொண்டு எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பது இவனுக்கு வாடிக்கை! இவனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வா. ஸ்ரீனிவாசன் - CHENNAI,இந்தியா
2012-12-25 14:07:36 Report Abuse
 வா. ஸ்ரீனிவாசன் இப்படி பட்ட கொடூரர்களுக்கு தூக்கு தண்டனையை விட கடுமையான தண்டனை வழங்க படவேண்டும்.. இப்படி பட்ட கீழ்த்தரமான எண்ணம் வரக் காரணமான 'முக்கிய உணர்ச்சியே' இனி இத்தகைய குற்றவாளிகளுக்கு வாராத அளவுக்கு ஒரு தண்டனை வழங்க படவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mozhi - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-12-25 13:29:28 Report Abuse
mozhi ஒரே நொடியில் முடிவது அல்ல தண்டனை செய்த தவரை எண்ணி அவனை வருந்தவைப்பதும் பிறருக்கு உணர்த்துவது தான் சரியான தண்டனை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in