பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து விட்டவர் ஜாக்கிசான். ஆக்ஷனை பிரதானமாகக்கொண்டு நடித்ததால் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த சிஇசட் 12 என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தோடு ஆக்ஷனுக்கு குட்பை சொல்லப்போவதாக அறிவித்தும் விட்டார் ஜாக்கி. இதையடுத்து காமெடித்தனமான கதைகளிலேயே அதிகமாக நடிக்கப்போகிறாராம்.
இந்த நிலையில், அப்படத்தை இந்தியாவில் வெளியிடும் வேலைகளும் துரிதமாக நடக்கிறது. இந்த படத்தின் டப்பிங் வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், அப்படத்தில் ஒருவர் ஜாக்கியிடம் எதற்காக ஆக்ஷனை நிறுத்தப்போகிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்பது போன்று ஒரு காட்சி உள்ளதாம். அதில், அறுபது வயசுக்கு பிறகும் பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிக்கிறதுக்கு நான் என்ன தமிழ் ஹீரோவா என்று கிண்டலாக ஜாக்கிசான் பதில் சொல்வது போன்று டப்பிங் பண்ணியிருக்கிறார்களாம். இதைக்கேள்விப்பட்டு கோடம்பாக்கத்தின் அறுபதை கடந்த சில ஆக்ஷன் ஹீரோக்கள் டென்சனாகி உள்ளனர். அதோடு, இந்த வசனத்தை படத்திலிருந்து கட் பண்ணி விடுங்கள் என்று மேற்படி படத்தை இந்தியாவில் வெளியிடும் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டு வருகிறார்களாம்.