தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கோபிசந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ஜெயம் ரவியுடன் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் கோபிசந்த். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவருக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் 23ம்தேதி இன்று ஐதராபாத்தில் நடக்கிறது. பிப்ரவரியில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.
நடிகர் கோபிசந்துக்கு ஏற்கனவே திருமணம் முடிவானது. ஹரிதா என்ற பெண்ணை மணக்கப் போவதாக அறிவித்தனர். திருமண தேதியும் முடிவானது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் ரத்தாகி விட்டது. அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் இப்போது ரேஷ்மா என்ற பெண்ணை மணக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.