Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஹிட் ரகசியம்! மனம் திறக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!!

23 டிச, 2012 - 12:50 IST
எழுத்தின் அளவு:

 வசூலைக்குவித்து கொண்டு இருக்கும் "துப்பாக்கி தந்த உற்சாகத்தில் இருக்கிறார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கிய ஏழு படங்களும் வெற்றி. என்றாலும் வெற்றியின் தலைக்கனம் இவரிடம் இல்லை. அமைதியான தோற்றத்துடன், அருமையான புன்முறுவலுடன், யதார்த்த மனிதராய்த் தெரிகிறார். விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாறு பாடத்தில், இளங்கலை பட்டம் பெற்று உள்ளார். சினிமாவில் சாதிக்கும் லட்சியத்துடன், சென்னைக்கு ரயில் ஏறியவர். தனி ஆளாக போராடி, காலுன்றி, இன்று உச்சத்தை தொட்டு விட்டார். எல்லா நடிகர்களுக்கும், இவர் படத்தில் நடிப்பது என்பது ஒரு கனவு. மதுரை வந்தவர், நம்மோடு பேசியதில் இருந்து...

* கல்லக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு சென்று சாதித்தது எப்படி?

திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்ததும், கனவு உலகமான சினிமாத்துறைதான் கண்முன் தோன்றியது. சென்னைக்கு கிளம்பி விட்டேன். கலைமணி இயக்கிய மக்களாட்சி, உதயசங்கர் இயக்கிய பூச்சுடவா, சூர்யா இயக்கத்தில் குஷி, வாலி போன்ற ஏராளமான படங்களில், உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.

* எப்படி அஜீத்..."தீனா ஆனார்?

வாலி படத்தில் பணிபுரிந்த போது, அஜீத்துடன் பழக்கம். 2001 காலகட்டத்தில் பல புதிய இயக்குனர்களை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் மூலம் "தீனாவை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அஜீத், சுரேஷ்கோபி நடித்த அப்படம் "ஹிட் ஆகி, என்னை பற்றி பேச வைத்தது.

* உங்கள் "ரமணா, விஜயகாந்திற்கு பெரும் மாற்றத்தை உருவாக்கியதே...?

போலீஸ், கிராமத்து சப்ஜெக்ட்டிலிருந்து வித்தியாசமாக ஒரு படம் செய்ய வேண்டும் என, நடிகர் விஜயகாந்த் விரும்பினார். அதன்படி ரமணாவை இயக்கினேன். அவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அந்தக் கதை ரசிகர்களுக்கு பிடிக்கும் என, எதிர்பார்த்தேன். படத்தை ரசிகர்கள் வெற்றி பெறச் செய்தனர். பழிக்குப்பழி வாங்கும் கதைகள் ரசிகர்களிடம் என்றைக்குமே வரவேற்பை பெறும். அதை சற்று வித்தியாசமாக மாற்றினால், மேலும் சிறப்பாக இருக்கும் என, திட்டமிட்டேன். அதன்படி, "கஜினி வெளியானது. இந்தியிலும் படம் படு ஹிட்.

* "துப்பாக்கி ஹிட் ஆகும் என எதிர்பார்த்தீர்களா?


நடிகர் விஜய் ஒரு "மாஸ் ஹீரோ. வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டிருக்க வேண்டும் என, விரும்பினார். அதன்படி துப்பாக்கியை இயக்கினேன். மும்பையில் ரியல் லொகேஷனில் விஜய் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி தான். இதற்காக விஜய்  உற்சாகம் தெரிவித்தார். அவரது தாய், தந்தை, மனைவி, ஏன் குழந்தைகள் உட்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்ததை மறக்க இயலாது. இந்தியில் அக்ஷய்குமாரை வைத்து இப்படத்தை இயக்கவுள்ளேன்.

* இயக்கிய படங்களில் உங்களுக்கு பிடித்தது...?

ஏழாம் அறிவு.  வித்தியாசமான படம். அறிவியல் ரீதியாக வரலாற்று தகவல்களுடன் நிறைய விஷயங்களுடன் வெளிவந்தது.

* உங்கள் "ஹிட் ரகசியம் என்ன?

மக்கள் ரசனைக்கு ஏற்ப, அடுத்து என்ன வரும் என, யூகிக்க முடியாதளவு படங்களை கொடுக்கும் போது "ஹிட் ஆகிறது. என் படங்களில், இதில் கவனமாக உள்ளேன்.

* இயக்குனர்கள் நடிகர்களாகும் காலம் இது... நீங்கள்..?

அந்த எண்ணம் இல்லை.

* கமல், ரஜினியை எப்போது இயக்க போகிறீர்கள்?

காலமும் கதையும் கைகூடினால் கட்டாயம்  இயக்குவேன்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

சரவணா - Sathaangulam,சா டோம்
24 டிச, 2012 - 02:18 Report Abuse
 சரவணா நீ முறுக்கு தாசா இல்லை கிறுக்கு தாசா ? சார் எனக்கு ஒரு டௌடு, உனக்கு மிட் நைட் எத்தினி மணிக்கு வேணா போன் பண்ணி டௌட் கேக்கலாமா ?
Rate this:
எ.selvaraj - muscat,ஓமன்
24 டிச, 2012 - 01:42 Report Abuse
 எ.selvaraj நன்றி ,நம்ம கள்ளகுறிச்சி கிராம பின்னணி உள்ள பெரிய படம் எடுக்க வேண்டுகிறேன். நிறைமதி எ.செல்வராஜ் .muscat .
Rate this:
விஜயன் - salem,இந்தியா
23 டிச, 2012 - 19:38 Report Abuse
 விஜயன் அடுத்து அகில உலக புகழ் அடுத்த ஆஸ்கார் நாயகன் பவர் ஸ்டார் வைத்து ஒரு படம் செய்யுங்கள் ARM
Rate this:
ப.SARAVANAN - tirupur,இந்தியா
23 டிச, 2012 - 19:26 Report Abuse
 ப.SARAVANAN உங்கள் அமைதிக்கும் , எளிமைக்கும் கிடைத்த வெற்றி சார்.
Rate this:
arvind - chennai  ( Posted via: Dinamalar Windows App )
23 டிச, 2012 - 16:20 Report Abuse
arvind சியான் விக்ரமை வெச்சு ஒரு படம் பண்ணுங்க
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in