சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை முதல் ரவுண்டில் நடத்தி வந்த சூர்யா, இரண்டாவது ரவுண்டில் அதிலிருந்து விலகி விட்டார். இப்போது அவர் இடத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் நடத்துகிறார். ஆனால் சூர்யா அதிலிருந்து விலகியதற்கு காரணம், மாற்றான் படத்தின் தோல்விதான் என்கிறார்கள். இந்த தோல்வியை இனி தொடரவிடக்கூடாது என்பதற்காக, சிங்கம்-2 வை சூப்பர் ஹிட்டாக கொடுக்கும் வரை எனக்குநிம்மதி இல்லை என்று முழுவீச்சில் நடித்து வருவதாக சொல்கிறார்கள்.
ஆனால் இதுகுறித்து சூர்யாவைக்கேட்டால், டி.வியில் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அதற்காகத்தான் சினிமாவில் பிசியாக இருந்தபோதும் ஒப்புக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நேயர்களை சந்திதது அந்த போட்டியை நடத்தியது இனிமையான அனுபவமாகவே இருந்தது. ஆனால் டி.வி நிகழ்ச்சியைவிட சினிமா ரொம்ப முக்கியம் என்பதால்தான், அதிக நாட்களை என்னால் டி.வி நிகழ்சசிக்கு செலவிட முடியவில்லை. அதனால் விலகிவிட்டேன் என்று சொல்லும் சூர்யா, வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்கள் மூலம் ரசிகர்களை சந்தித்து வந்த நான், சின்னத்திரை மூலம் தினம்தினம் அவர்கள் முன் தோன்றுவதால் எனக்கான மவுசு குறைந்து விடும் என்றும் மனதிற்கு பட்டது. அதனால்தான் முழுவதுமாக அந்த நிகழ்ச்சியை தவிர்த்து விட்டேன் என்றும் சொல்கிறார்.
ஒரு கோடி நிகழ்ச்சியாவது பரவாயில்லை. விரும்பியவர் பார்த்துக் கொள்ளலாம்.ஆனால் ஒரு விளம்பரம் பாக்கியில்லாமல் வந்தால் மக்கள் எந்த சேனல் பார்த்தாலும் சூர்யா, வேறு நடிகர்களின் படத்தி்ற்கு சென்றாலும் சூர்யா விளம்பரம் என இருந்தால் நிச்சயம் சூர்யா முகம் போரடித்து விடும். முன்பெல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றோரின் முகத்தை பார்க்க வேண்டுமென்றால் தி்யேட்டருக்கு வந்தால்தான் முடியும். அதனால் மவுசு ஏறியது. விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டாலே சிறிது மவுசு ஏறும்