ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ என படங்களில் நடித்து விட்டபோதும், பியாவுக்கென்று, ஒரு மார்க்கெட்டோ, ரசிகர் வட்டமோ உருவாகவில்லை. தமிழில் தான் இந்த நிலை என்றால், மற்ற மொழிகளிலும் இதே நிலைதானாம். இதற்கு காரணம் பியா நடித்த எந்த படமும் பெரிய அளவுக்கு பேசப் படவில்லை என்று ஒரு கருத்து இருந்தாலும், "தொடர்ந்து, அல்ட்ரா மாடர்ன் கேரக்டர்களில் மட்டுமே நடித்ததும், என் மார்க்கெட்டை மந்தமாக்கி விட்டது என்கிறார் பியா. அதனால், தற்போது நடித்துள்ள, "சட்டம் ஒரு இருட்டறை, கூட்டம் படங்களையடுத்து, மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும், அழுக்கான @வடத்திலும், நடிக்கப் போவதாக சொல்கிறார். பியா கதாநாயகியாகத் தான் நடிப்பேன் என்றில்லாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் கிடைத்தாலும் நடிக்கத் தயாராக இருக்கிறாராம்.