'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன், அர்ஜூன் நடித்த,"அரசாட்சி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் லாரா தத்தா. அதன் பின் தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், தொடர்ந்து, இந்தி படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, ஒரு குழந்தைக்கு தாயான லாரா தத்தா, சினிமாவை விட்டு முற்றிலுமாக, விலகி முழுநேர இல்லத்தரசி ஆனார். இந்நிலையில், தமிழில், புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் தயங்கிய, லாரா தத்தா, அந்த படம், தமிழ், இந்தி என, இரு மொழிகளிலும் தயாராவதை அறிந்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்சுக்கு, சரியான படம் இதுதான் என்று கமிட்டாகி நடிக்கிறார்.