தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லேசா லேசா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. அப்படி அவர் நடிக்க வந்து 10 ஆண்டுகளை கடந்து விட்டார். மெளனம் பேசியதே படத்தில் நடித்தபோதே சினிமாவை விட்டு வெளியேற இருந்தவர், விக்ரமுடன் நடித்த சாமி படத்தின் ஹிட் காரணமாக, சினிமாவில் நிலையான நடிகையாகி விட்டார். அதோடு நடிக்க வந்தது முதல் இப்போது வரை தனது உடல்கட்டை ஸ்லிம்மாக பாதுகாத்தும் வருகிறார். இதனால் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிப்பதற்கும் அவரது தோற்றம மேட்சிங்காகி வருகிறது.
இதற்கிடையே ராணாவுடன் காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்களில் சிக்கியிருந்தவர், இப்போது அதிலிருந்து மீண்டு விட்டார். தமிழில் மூன்று படம், தெலுங்கில் 2 படம் என கால்சீட் டைரியையும் புல் பண்ணி வைத்திருக்கிறார். இந்த நிலையில், தன்னிடம் நெருங்கி பழகும் சிலவளர்ந்து வரும் நடிகைகள், எப்போது நடிப்புக்கு முழுக்குப்போடப் போகிறீர்கள்? என்று த்ரிஷாவைக்கேட்டதற்கு, அப்படியொரு ஐடியாவே இல்லை. இன்னும் 10 வருசத்துக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்கப்போகிறேன் என்கிறாராம். மார்க்கெட்டில் தக்க வைத்துக்கொள்ள என் உடல்கட்டையும் இப்படியே மெயின்டெயின் பண்ணப்போகிறேன். அது என்னால் முடியும் என்றும் சொல்லி மார்தட்டுகிறாராம்.