Dinamalar.com |November 07,2009

அபிஷேக்கின் மகனாக நடிக்கிறார் அமிதாப்!
குள்ளமான உருவம், சற்றே விகாரமான, மன வளர்ச்சி குன்றிய மாணவனின் தோற்றம்... என பா படத்தில் வித்தியாசமாக நடித்திருக்கிறார் பாலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன். இந்த உருவத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் பிரமித்து போவார்கள். உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா. ரூ.15 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தை சீனி கும் என்ற வெற்றிப் படத்தைத் தந்த தமிழ் இயக்குனர் பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். வெறும் ஒப்பனைக்காகவே பல கோடிகளை செலவழித்துதான் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்திருக்கிறார் பால்கி. இந்தப் படத்தின் கதை மட்டுமல்ல... அமிதாப்பின் தோற்றமும் வித்தியாசமானது. மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக இதில் தோன்றுகிறார் அமிதாப். இதற்காக அமிதாப்புக்கு சிறப்பாக மேக்கப் செய்ய லண்டனிலிருந்து நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டாராம். அபிஷேக் பச்சனின் மகனாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம் அமிதாப். டிசம்பர் 4ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது பா. இப்படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. உடம்பெல்லாம் புல்லரிக்க வைக்கும் ஏழு பாடல்கள்... அவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அசத்தலான பின்னணி இசை என அமிதாப் உள்ளிட்ட குழுவினரை அசர வைத்துள்ளாராம் ராஜா. குறிப்பாக இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ராஜா போட்டுக் கொடுத்திருக்கும் ஒரு தீம் மியூசிக் கேட்கும்போதே மனதை கரைத்து கலங்கடிக்கிறது. மேலும் இளையராஜாவின் இசையில் அமிதாப் ஒரு பாடலும் பாடியுள்ளார். படத்தின் பின்னணி இசையுடன் சில காட்சிகளைப் பார்த்த அமிதாப், இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞர் இவர். இவருடைய இசையில் நான் நடித்திருப்பது பெரும் பாக்கியம் என்று ஆனந்தத்தில் கண் கலங்கி கூறியுள்ளார்.

ஜெனிலியா மீது காதல் இல்லை : ரிதீஷ் தேஷ்முக்
பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. இவர் விஜய்க்கு ஜோடியாக சச்சின் படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திலும் நடித்தார். பிறகு இந்தி, தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். ஜெனிலியாவும், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதீஷ்தேஷ்முக்கும் காதலிக்கிறார்கள் என செய்தி வெளியானது. விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வராவார். ஜெனிலியாவும், ரிதீஷும் சேர்ந்து சினிமா விழாக்களில் பங்கேற்றனர். நட்சத்திர ஓட்டல் விருந்துகளிலும் கலந்து கொண்டனர். இந்த காதல் பற்றி ஜெனிலியாவிடம் கேட்டபோது, மறுத்தார். இருவரும் நண்பர்கள் என்றார். அதிகாரத்தை பயன்படுத்தி விலாஸ்ராவ் தேஷ்முக் மிரட்டியதால் ஜெனிலியா பயந்து மறுத்ததாக தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் ரிதீஷ் தேஷ்முக்கும் காதல் விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நானும், ஜெனிலியாவும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. நாங்கள் இருவரும் நண்பர்களாகத் தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் மீது இது போன்ற கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான். அதோடுதான் வாழ வேண்டி இருக்கிறது. யார் மீதும் இதுவரை எனக்கு காதல் ஏற்படவில்லை. காதல் என்பது ஒருவர் மீது திடீரென்று ஏற்படுவது. அப்படிப்பட்ட பெண்ணை இன்னும் நான் சந்திக்கவில்லை என்றார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பி.சுசீலா விருது
பின்னணி பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை விருது, இந்தாண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்படுகிறது. இதுபற்றி பி.சுசீலா கூறியதாவது: திரையுலகில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு எனது அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சுசீலா விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகி பெற்றார். இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெறுகிறார். இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. நவம்பர் 14ம் தேதி ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. பாலமுரளிகிருஷ்ணா, டி.எம்.சவுந்திரராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஜானகி, பி.பி.சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று யூ.கே.முரளி இசையில் பாடுகின்றனர். இதில் திரளும் நிதியில் பாதி, ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும். தலைமை தாங்குவதற்கு கமல்ஹாசனை அழைக்க உள்ளேன். இவ்வாறு பி.சுசீலா கூறினார்.

பிரபுதேவா இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்
பிரபுதேவா இயக்கும் படத்தில் கமலின் மகள் ஸ்ருதியை, ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒப்பந்தம் பண்ணியிருக்கிறார். இந்தியில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தோல்வி கண்ட ஸ்ருதி, மீண்டும் இந்திக்கு சென்று வெற்றி பெறாமல் திரும்பமாட்டேன் என்றெல்லாம் கூறி வந்தார். இதற்கிடையில் பிரபுதேவாவின் அழைப்பு அவரை தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. இந்த அழைப்பை மதித்து, தேதி கொடுத்தால் இந்தியில் நம்மை வைத்து படம் எடுப்பார் என்றும் எண்ணியிருக்கலாம். தனது மகள் தமிழில்தான் அறிமுகம் ஆக வேண்டும் என்று விரும்பியவர் கமல். ஆனால், மகளது விருப்பம் இந்தி திரையுலகை நோக்கி இருந்ததால் அதற்கும் சம்மதம் தெரிவித்தவர், இந்த வாய்ப்பை மனதார வரவேற்கிறாராம். படத்திற்கு பாரீஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

நா‌டோடிகள் அனன்யாவின் அடுத்த படம் சீடன்
நாடோடிகள் படத்தில் ‌நொறுக்குத்தீனி தின்றபடியே திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த‌ கேரள ப்யூட்டி அனன்யா அடுத்து சீடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மலையாளத்தில் ப்ருத்விராஜ் - நவ்யா நாயர் நடித்த படம் நந்தனம். இப்படத்தை தமிழில் சீடன் என்ற பெயரில் இயக்கப்போகிறார் டைரக்டர் சுப்பிரமணியம் சிவா. இதில் நடிகர் பிருத்விராஜே நாயகனாக நடிக்கிறார். நாடோடிகளுக்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் கேரளாவுக்கு பறந்த அனன்யா தற்போது சீடன் படத்தில் நாயகியாக நடிக்கிறார். நடிகர் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் சிலரும் நடிக்கவுள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராமிடம் அசிஸ்‌டண்ட்டாக இருந்து கேமரா பயிற்சி பெற்ற ஸ்ரீனி ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது யோகி படத்தை இயக்கி முடித்திருக்கும் ‌சுப்பிரமணியம் சிவாவிற்கு, நிறைய படங்களில் நடிக்க ஹீரோ வாய்ப்பு வாயிற் கதவை தட்டியபோதிலும் இயக்கத்தில் இன்னும் உச்சத்தை அடைய வேண்டும் என கருதிய அவர், நடிப்புக்கு நோ சொல்லி விட்டார் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.

தேசிய விருது வாங்குவதே லட்சியம் என்கிறார் பூமிகா
கல்யாணம் முடிந்த கையோடு கலைச்சேவையாற்றி வரும் பூமிகாவுக்கு ‌தேசிய விருது வாங்குவதுதான் லட்சியமாம். தற்போது பூமிகாவுக்கு தமிழிலும், தெலுங்கிலும் கைவசம் 6 படங்கள் உள்ளன. தமிழில் தங்கர்பச்சான் இயக்கி வரும் களவாடிய பொழுதுகள் படத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிக்கிறார். இதுதவிர, தகிட தகிட என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்து வருகிறார். தனது அடுத்த இலக்கு குறித்து பூமிகா அளித்துள்ள பேட்டியில், நான் தேசிய விருது பெற்ற நடிகை என்ற பெயரைப் பெற வேண்டும். இதுவரை பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் தேசிய விருதுதான் எனது லட்சியம். அதனால் அதற்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அதையடுத்து நானே கதை எழுதி ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது இன்னொரு கனவு. அதற்காக கதை தயார் செய்து வருகிறேன். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இயக்குநர் ஆவேன்'' என்று கூறியுள்ளார்.

சினிமாவுக்காக இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன் : சசிக்குமார்
சினிமாவை கற்றுக் கொள்வதற்காக இஷ்டப்பட்டு கஷ்டப்பட்‌டேன்... என்று கூறியிருக்கிறார் டைரக்டர் சசிக்குமார். சுப்பிரமணியபுரம் படம் மூலம் ஹிட் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்த சசிக்குமார், நாடோடிகளில் நாயகனாக நடித்ததால் ஹிட் நாயகனாகவும் ஆனார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தபோது ஆபீஸ் பாய் வேலையும் பார்த்திருக்கிறேன். எல்லோருக்கும் டீ வாங்கி வந்து கொடுத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் எனக்கு டீ வாங்கிக் கொடுத்த பத்து பேர் இருப்பார்கள். என் சொந்தக்காரர்கள் சென்னை வந்து என்னை பார்த்த‌போது, ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? என்று மனம் வருந்தியிருக்கிறார்கள். நான் சினிமாவை கற்றுக் கொள்வதற்காக இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன், என்று கூறியிருக்கிறார்.

அமீரின் யோகி 27ம்தேதி ரீலிஸ்
பருத்திவீரன் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற டைரக்டர் அமீர் நாயகனாக நடித்துள்ள படம் யோகி. சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக நடிகை மதுமிதா நடித்திருக்கிறார். சென்னையில் உள்ள குடிசை பகுதிதான் யோகி படத்தின் கதைக்களம். அங்கு வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி இளைஞனின் உணர்வுகளை ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருக்கிறார்களாம். யோகி படம் வருகிற 27ம்தேதி ரீலிஸ் ஆகவிருக்கிறது. சென்னை மற்றும் மதுரை நகரங்களில் மட்டும் தனது டீம்வொர்க் புரொடக்ஷன் மூலம் யோகியை வெளியிடுகிறார் அமீர். யோகி படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை பார்த்த தமிழ் சினிமா மூத்தோர்கள் பலரும் சுப்பிரமணியம் சிவாவை வாயார வாழ்த்தியிருக்கிறார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதுடன், இப்படத்தின் மூலம் சுப்பிரமணியம் சிவாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றும் பாராட்டி வருகிறார்களாம்.

ஷில்பாஷெட்டி திருமணம் : மும்பையில் 22ம்தேதி நடக்கிறது
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி - தொழிலதிபர் ராஜ்குந்த்ரா திருமணம் மும்பையில் வருகிற 22ம்தேதி நடக்கிறது. லண்டனில் நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஷில்பா ஷெட்டிக்கும், லண்டன் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ம்தேதி நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஷில்பாவின் தங்கை ஷமீரா ஷெட்டி பங்கேற்கவில்லை. அதனால் அவர் ஷமீதாக்கு ஏற்ற நாளில்தான் எனது திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே ஷில்பா ‌தெரிவித்திருந்தார். இந்நிலையில் வருகிற 22ம்தேதி ஷில்பா - ராஜ்குந்த்ரா திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ஷில்பாவின் பிசினஸ் பார்ட்னர் கிரன்பாவாவின் பங்களாவில் நடைபெறவுள்ள இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்கிறார்கள். அதனைத்தொடர்ந்து 24ம்தேதி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் ஷில்பாவில் திரையுலக நண்பர்கள், பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடிக்கும் முறியடி
அபியும் நானும் படத்தில் த்ரிஷாவின் பஞ்சாப் சிங் காதலராக வந்து கலகலப்பூட்டிய சாக்லேட் பாய் கணேஷ் வெங்கட்ராமன். ஏராளமான விளம்பர படங்களில் நடித்து பெயர் பெற்ற கணேஷ், அபியும் நானும் படத்தினைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன் படத்தில் துடிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்தார். தனி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லி வந்த அவருக்கு தற்போது தனி நாயகன் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் கவிதாலயா படத்தில்! நான் அவன் இல்லை 2ம் பாகம் படத்தை இயக்கிய வரும் டைரக்டர் செல்வா, அந்த படத்திற்கு பிறகு இயக்கும் புதிய படம் முறியடி. இப்படத்தில்தான் கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடிக்கிறார். படத்தில் அவருக்கு வக்கீல் கேரக்டராம். கணேஷூக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் பொள்ளாச்சியில் சூட்டிங் தொடங்கவிருக்கிறது. படத்திற்கு இமான் இசையமைக்க, பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னையில் அஜித்தின் அசல் டீம் ; சூட்டிங்கில் பிஸி
சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் டைரக்டர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசல். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் படங்களைத் தொடர்ந்து அஜித் - சரண் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, பாவனா நடிக்கிறார்கள். அசல் படத்தின் முதல் கட்ட சூட்டிங் மலேசியாவில் நடந்தது. அதனைத் தொடர்ந்து பிரான்சில் படமாக்கப்பட்டது. வெளிநாட்டு காட்சிகளை திருப்திகரமாக எடுத்துவிட்ட மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பியிருக்கும் அசல் டீம், தற்போது சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறது. அசல் படம் குறித்து சரண் அளித்துள்ள பேட்டியில், அசல் அஜித்தின் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும். இது முழுக்க முழுக்க கம்ஷியல் படம். படத்தின் திரைக்கதை ரொம்பவே விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதால் வெற்றி நிச்சயம், என்று கூறியிருக்கிறார். திட்டமிட்டபடி படத்தின் சூட்டிங் நடந்து வருவதாக சொல்லும் சரண், படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை ஏவி.எம். ஸ்டூடியோவிலும் படமாக்க திட்டமிட்டிருக்கிறார். பொங்கலுக்கு அசல் ரீலிஸ் உறுதி!

இந்தி நடிகை இஷாகோபிகருக்கு 29ம்தேதி கல்யாணம்
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான இஷா கோபிகருக்கு இம்மாதம் 29ம்தேதி திருமணம் நடைபெறுகிறது. தமிழில் ‌விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா, பிரஷாந்துடன் காதல் கவிதை ஆகிய படங்களில் நடித்துள்ள இஷாகோபிகர், சில தெலுங்கு படங்களிலும் தலை காட்டியிருக்கிறார். இவருக்கும் மும்பையில் ஹோட்டல் நடத்தி வரும் தொழிலதிபர் ‌டிம்மி நரங் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நரங்கை பல மாதங்களாகவே இஷா காதலித்து வந்தார். இதுதொடர்பாக அவ்வப்போது பத்திரிகைகளில் கிசுகிசுக்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டதைத் தொடர்ந்து திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 29ம்‌தேதி நரங் - இஷா திருமணம் முமபையில் நடைபெறுகிறது.

அபிஷேக்குடன் ஜோடி சேர அசின் மறுத்தது ஏன்?
கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போன அசின், தனது முதல் படமான கஜினி மூலம் மும்பை ரசிகர்களை கிறங்கடித்தார். அதன் பிறகு நடித்த லண்டன் ட்ரீம்ஸ் சமீபத்தில் வெளியானது. கஜினி அளவுக்கு ‌படம் ரசிகர்களை கவரா விட்டாலும், அசின் மார்க்கெட் இறங்கவில்லை. இந்நிலையில் அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர அசினுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அபிஷேக் நாயகனாக நடிக்கும் கெஹ்லேங்கே ஹம் கீ ஜான் சே என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க அசினிடம் கால்ஷீட் கேட்டனர். முதலில் ஓ.கே., சென்ன அசின் இப்போது, கால்ஷீல் இல்லை என்று ஜகா வாங்கிக் கொண்டாராம். ஏன் இந்த மனமாற்றம் என்று பாலிவுட் பக்கம் விசாரித்தால், லண்டன் ட்ரீம்ஸ் படம் சரியாக போகாததால் அப்செட் ஆகியிருக்கும் அசின், இனி நல்ல கதையுள்ள படத்தில்தான் கமிட் ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம். அபிஷேக்குடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பில் தனது வேடத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததாலும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை தமிழ் பெண்ணை மணக்கிறார் டைரக்டர் தருண்கோபி
தமிழ் திரைப்பட இயக்குனர் தருண்கோபி இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணை திருமணம் செய்கிறார். திமிரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் தருண்கோபி. அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து காளை என்ற படத்தை இயக்கினார். மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தருண்கோபி, தற்போது ஜீவா பூங்கா, என்னை ஏதோ செய்துவிட்டாய், காட்டுப்பய ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தருண்கோபிக்கும்,  இலங்கை தமிழ் பெண் ஜானு லிங்கேஸ்வ‌ரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் ஜானு இலங்கையை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர்களது திருமணம் வருகிற ஜனவரி மாதம் 15ம்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது.

நமீதாவுக்காக உருவாகும் நில் கவனி என்னை காதலி
ஜகன்மோகினி படத்தில் கவர்ச்சியில் கோர தாண்டவமே ஆடியிருக்கும் நமீதாவுக்காக, மலையாளத்தில் உருவாகவிருந்த படத்தை தமிழில் எடுத்து வருகிறார்கள். மலையாளத்தின் பிரபல இரட்டை இயக்குநர்கள் பிரமோத் - பப்பன் ஆகியோர் தமிழில் இயக்குனர்களாக அறிமுகமாகும் படம் நில் கவனி என்னை காதலி.  நாயகனாக அன்பு பாலா நடிக்கிறார். நாயகியாக நமீதா நடிக்கிறார். இவர்கள் தவிர கலாபவன் மணி, பவன், ஆசிஷ்வித்யார்த்தி, பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படம் முதலில் மலையாளத்தில் உருவாக இருந்தது. பிறகு, நமீதாவின் முக்கியத்துவம் கருதி தமிழிலேயே படம் உருவாகி வருகிறது. திருப்பூரில் குடும்பத்துடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் நாயகியை ஒரு போலீஸ் அதிகாரி கட்டாயத் திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அதற்கு அவள் மறுக்கவே, நாயகியின் தந்தையை சுட்டுக் கொல்கிறார் போலீஸ் அதிகாரி. இதையடுத்து அந்தப் போலீஸ் அதிகாரியை புத்திசாலித் தனமாகத் திட்டமிட்டு, பழிவாங்கும் நாயகியைப் பற்றியதே கதை. இதில் நமீதா ஆக்ஷன் நாயகியாக வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார் என்பது கொசுறு தகவல்.

சேக்ஸ்போன் இசையில் மெல்லிசை மன்னரின் பாடல்கள்
புல்லாங்குழல் இசைக்கலைஞராக அறிமுகமாகி சேக்ஸ்போன் எனும் இசைக்கருவியை வாசிப்பதில் அனுபவம் பெற்றிருக்கும் எஸ்.நாதன் தனது மானசீக குரு எம்.எஸ்.விஸ்வநாதனின் சூப்பர் ஹிட் பாடல்களை சேக்ஸ்போன் இசையில் வாசிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த ஆசை நாளை (6ம்தேதி) நிறைவேறப்போகிறது. ஐ.டி. துறை தொழிலதிபர் தேவய்யா, நாத‌னுடன் இணைந்து சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். நாளை மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் ஹிட் பாடல்களில் முத்தான முப்பது பாடல்களை தேர்ந்தெடுத்து தனது சேக்ஸ் போனில் வாசிக்கவிருக்கிறார் எஸ்.நாதன். அவரது பின்னணியில் கோரஸ் பெண்கள் உள்ளிட்ட 45 கலைஞர்கள் இசைக்கருவிகள் வாசித்து நிகழ்ச்சியை வண்ணமயமாக்க இருக்கிறார்கள். நிகழ்ச்சியை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ‌தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி மெகா ஜிகா ஷோ என்ற நிறுவனம் இன்டர்நெட்டில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என்பது எக்ஸ்ட்ரா தகவல்.

விஜய், அஜித் படங்களுடன் போட்டியிட தயாராகும் மகதீரா
தெலுங்கில் ராம்சரண் தேஜா - காஜல் அகர்வால் நடித்து சக்கை போடு போடும் மகதீரா படம் தமிழிலும் உருவாகி வருகிறது. பூர்வ ஜென்மத்தில் நிறைவேறாத காதல் கதையம்சத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் வில்லனாக தேவ் கில் நடித்துள்ளார். இவர்தான் விஜய்யின் சுறா படத்தில் வில்லனாக நடிக்கிறார்.  மகதீரா படத்தை தமிழில் உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முதல் பாதி படம் கலகலப்பூட்டும் வகையில் தமிழில் மீண்டும் படமாக்கப்படுகிறது. பின் பாதி பகுதி தெலுங்கில் இருந்து அப்படியே டப் செய்யப்படுகிறது.  பொங்கலுக்கு ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் இப்படத்தை வளர்ந்து வருகிறார்களாம். அப்போ பொங்கலுக்கு விஜய்யின் வேட்டைக்காரன், அஜித்தின் அசல், கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுடன் மகதீராவும் போட்டி ‌போடப்போகிறது.

மெரினாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட இயக்குனர்கள் முடிவு
வருகிற தை மாதம் 1ம்தேதி தமிழ் புத்தாண்டு தினம் உலக தரத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதியை, சங்கத்தின் பொதுச்செயலாளர் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, துணைத்தலைவர் விக்ரமன், இணைச்செயலாளர்கள் என்.லிங்குசாமி, அமீர், டி.கே.சண்முகசுந்தரம், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஈ.ராம்தாஸ், எழில், மாதேஷ், பேரரசு, இணை இயக்குனர்கள் ஆர்.சிபி, ராஜா கார்த்திக் ஆகியோர் சந்தித்தார்கள்.

அப்போது, வருகிற ஜூன் மாதம் கோவையில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் பங்குபெறவும், தமிழ் மொழியின் தொன்மையையும், சிறப்பையும் விளக்கும் விதமாக இயக்குனர்கள் பங்குபெறும் வரலாற்று நாடகங்களை நடத்தவும் அனுமதிக்குமாறு நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்கள். ஆங்கில புத்தாண்டு மற்றும் சீனப்புத்தாண்டு போல், தமிழ் புத்தாண்டு மிக சிறப்பாக, கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் வருகிற 2010 தமிழ் புத்தாண்டில், சென்னை மெரினா கடற்கரையில் உலக தரத்துடன் வானவேடிக்கைகள் நடத்துவதற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில், முதல்வர் கருணாநிதி பங்கேற்க வேண்டும் என்றும் டைரக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காதலன் காதலிக்கு சஸ்பென்ஸ் விளக்கம் தரும் ஜெய் ஆகாஷ்
டெய்ஸிபோபண்ணா, நிதி சுப்பையா, சுஹாசினி ஆகி மூன்று புதுமுகங்கள் ஜோடியாக ஜெய் ஆகாஷ் நடித்து இயக்கியிருக்கும் படம் காதலன் காதலி. படத்தில் மூன்று நாயகிகள் இருப்பதால் காதலன் காதலிகள் என்றல்லவா டைட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஆகாஷிடம் கேட்டால், சஸ்பென்ஸ் பதில் சொல்கிறார். 3 கதாநாயகியர் காதலிகளாக இருந்தாலும், யார் ஹீரோ மீது உண்மையான காதல் வைக்கின்றார் என்பதுதான் கதையே.  அதனால்தான் காதலன் காதலி என்று டைட்டில் வைத்திருக்கிறேன் என்கிறார். ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜே.வி.நிஷா தயாரிக்கும் இப்படத்தை ஜாக்ஸி ஜான் ஒளிப்பதிவு செய்ய, ஜெய் ஆகாஷின் நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்திற்கு நந்தன்ராஜ் எனும் புதியவர் இசையமைக்கிறார்.

கார்த்தி பஞ்சாயத்தால் சிம்புவுக்கு அடித்தது லக்
டைரக்டர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகவிருந்த புதிய படத்தின் நாயகனாக நடிக்க பருத்திவீரன் கார்த்தி ஒப்பந்தமாகியிருந்தார். கதை விவாதம் நடந்து வந்த நிலையில், கதையில் நிறைய குறுக்கீடுகள் செய்த கார்த்தி, தனது இமேஜூக்கு ஏற்ப காட்சிகள் உருவாக வேணடும் என்று கேட்டாராம். இதனால் வெறுத்துப்போன ஆனந்த், கார்த்திக்கு பதிலாக வேறு நாயகனை போடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். த‌ற்போது லக் அடித்திருப்பது சிம்புவுக்கு. கதையே தெரிய வேண்டாம்... கூப்பிடுறப்ப வர்றேன் என்று சொல்லி கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்து அசத்தி விட்டாராம் சிம்பு.