Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டி படத்தை பாருங்கள் : ஜெகன் மோகனுக்கு சொந்த கட்சி எம்.பி அட்வைஸ்

03 மே, 2021 - 20:30 IST
எழுத்தின் அளவு:
MP-advice-Jagan-mohan-to-watch-mammootty-film

மலையாளத்தில் கடந்த மாதம் மம்முட்டி நடித்த '1' என்கிற படம் வெளியானது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில், கடக்கல் சந்திரன் என்கிற பெயரில், கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மம்முட்டி.. ஒரு நேர்மையான, மக்களுக்கான முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.. ஆனாலும் இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்தநிலையில், சமீபத்தில் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கணுமுறு ரகுராம கிருஷ்ண ராஜூ என்பவர் இந்தப்படத்தை பார்த்துள்ளார். இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கட்டாயம் இந்தப்படத்தை பார்க்க வேண்டும்.. ஒரு சிறந்த முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்தப்படம் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்” என கூறி அதிர வைத்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக உள்ள ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டியை, எப்படி ஆட்சி செய்யவேண்டும் என, ஒரு திரைப்படத்தை பார்க்கும்படி, அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பியே அட்வைஸ் செய்துள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.பி கணுமுறு ரகுராம கிருஷ்ண ராஜூ, கடந்த சில மாதங்களாகவே முதல்வர் ஜெகன்மோகன் பற்றியும் கட்சி பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தா இல்லாமல் நடக்கும் சகுந்தலம் படப்பிடிப்புசமந்தா இல்லாமல் நடக்கும் சகுந்தலம் ... எடை குறைக்க உதவிய உன்னி முகுந்தனுக்கு அனு சித்திரா நன்றி எடை குறைக்க உதவிய உன்னி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு ஜெகனுக்கே படமா ? அவர் காட்டாத படமா ? வாடிகன் பணத்துடன் அவர் எடுக்காத படமா ?
Rate this:
chellapandi - Singapore,சிங்கப்பூர்
06 மே, 2021 - 14:13 Report Abuse
chellapandi .......
Rate this:
chandran - madurai,இந்தியா
05 மே, 2021 - 10:52 Report Abuse
chandran அந்த MLA தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்.. CM ஜெகன் மோகன் ரெட்டி YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.. நீங்கள் எப்படி சொந்த கட்சியை சேர்ந்த MLA அட்வைஸ் பண்ணினாரு என்று சொல்கிறீர்கள்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in