விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ஹீரோவாக என்றில்லாமல் எந்த கேரக்டர் என்றாலும் நடிப்பதற்கு மலையாள நடிகர் பஹத் பாசில் தயாராகவே இருக்கிறார். அது, படத்தில் கொஞ்ச நேரம் வந்து போகக்கூடிய வேடம் என்றாலும் அவருக்கு சம்மதமே. தற்போது கும்பளாங்கி நைட்ஸ்' என்ற படத்தில் ஒரு சைக்கோ வில்லன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் பகத் பாசில். இது தவிர இரண்டு இளம் ஹீரோக்கள் கேரக்டர் இந்த படத்தில் இருந்தாலும், இந்த வில்லன் கேரக்டரை தானே கேட்டு வாங்கியிருக்கிறார் பஹத் பாசில்.
காரணம் இந்தப் படத்தின் கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் மீது பஹத் பாசில் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கை தான். ஏற்கனவே 22 பீமேல் கோட்டயம் என்கிற படத்தில், இதே போல வில்லனாக நடிக்கும் வாய்ப்பையும், மகேஷிண்டே பிரதிதிகாரம் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பஹத் பாசிலுக்கு கொடுத்தவர் இந்த கதாசிரியர் தான். அதனால் இந்தப்படத்தில் பஹத் பாசிலின் புதிய முகத்தை இந்த படத்தில் நிச்சயம் நாம் பார்க்கலாம்.