ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான '96' படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. இதன் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளார் இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நானி - சமந்தா இருவரும் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இதில் கதாநாயகனாக சர்வானந்த் நடிக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கதாநாயகியாக சமந்தா தான் நடிக்கிறாராம். ஆனால் இரண்டு மாதங்களுக்கு சமந்தாவிடம் இந்தப்படத்தில் நடிப்பீர்களா என கேட்கப்பட்டபோது, இதில் தான் நடிக்கவில்லை என அவர் கூறியிருந்தாலும் பரவாயில்லை.. ஆனால் இந்தப்படமே ரீமேக் ஆக வாய்ப்பில்லை என ஒரு பதிலை கூறி அதிர வைத்தார். ஆனால் தற்போது அவரே கதாநாயகியாக நடிக்கிறார் என்பதுதான் ஆச்சர்யம்.