அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ஹலோ படத்தில் அகிலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். பிரபல இயக்குனர் பிரியதர்ஷன்-லிசியின் மகளான இவர் தற்போது சில தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், தனது தந்தையான டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கும் ஒரு படத்தில் விரைவில் தான் நடிக்கயிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் கல்யாணி பிரியதர்ஷன். இந்நிலையில், தற்போது மோகன்லாலை வைத்து பிரியதர்ஷன் இயக்கி வரும் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற படத்தில் அவர் ஒரு சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்டுள்ள கப்பல் செட்டில் நடந்து வரும் நிலையில், டிசம்பர் 8-ந்தேதியான நேற்று முதல் கல்யாணி பிரியதர்ஷன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.