இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நீண்ட நாட்களுக்கு பிறகு மம்முட்டி தெலுங்கில் நடித்துள்ள படம் யாத்ரா. மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளார். 2004ல், அவர் மேற்கொண்ட அரசியல் பாதயாத்திரையும், அரசியலில் அது ஏற்படுத்திய மாற்றமும் இந்தப்படத்தின் கதை. அறிமுக இயக்குனர் மஹி ராகவ் இயக்கியுள்ள இந்தப்படம், டிச-20ஆம் தேதி வெளியாகும் என பல மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. காரணம் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லையாம். இதனால் இந்தப்படத்தை வரும் பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அதாவது என்.டி.ஆர் சுயசரிதையாக பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் படத்துக்கு போட்டியாக யாத்ராவை களம் இறக்கலாம் எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.