ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் 'ஒடியன்'. விளம்பரப்படங்களை இயக்கி வந்த ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். வரும் டிச-14ஆம் தேதி இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு புரமோஷன் நிகிழ்சிகளில் பிஸியாக இருந்த இவர், நேற்று முன் தினம் விமான நிலையத்தின் எஸ்கலேட்டரில் செல்லும்போது கீழே தவறி விழுந்தார்.
முகம் தரையில் படுமாறு கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டதுடன் இவரது தாடை பகுதியில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாம். உடனடியாக இவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் இரண்டு வாரங்கள் கட்டாயம் ஓய்வு எடுத்தாக வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனராம்.