‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாகுபலி, பாகுபலி-2 படங்களை இயக்கி உலக அளவில் பேசப்பட்டவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் தற்போது ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குகிறார். இவரது மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா. இவர், பாகுபலி- படத்தில் பணியாற்றினார். தற்போது ஒரு கபடி டீமை வாங்கி தெலுங்கானா பிரிமியர் லீக்கில் பங்கேற்றுள்ளார்.
கார்த்திகேயாவிற்கும், தெலுங்கு நடி கர் ஜெகபதிபாபுவின் அண்ணன் மகள் பூஜா பிரசாத்திற்கும் ஜனவரி மாதம் 5-ந்தேதி திருமணம் நடக்கிறது. சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கார்த்திகேயாவும், பூஜாவும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் சொன்னதை அடுத்து தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. இந்த திருமணம், ஐதராபாத்திலுள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடைபெறவிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.