சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சமீபகாலமாக மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நடிகை நித்யா மேனன். ஏற்கனவே 'பிரண' என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்ட நித்யா மேனன், தற்போது 'கோலம்பி' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து பஹத் பாசிலுடன் இணைந்து நடிக்க இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். ஆனால் அது படத்தில் வெறும் சில நிமிடங்களே வந்து செல்லும் கெஸ்ட் ரோலாக அமைந்துவிட்டதில் அவருக்கு வருத்தம் இருந்தது. அதனால் தான் அந்தப்படம் தமிழில் ரீமேக் ஆனபோது கூட, அதே கேரக்டரில் அவரை நடிக்க அழைத்தபோது மறுத்துவிட்டார்.
அந்தவிதமாக தற்போது பஹத் பாசிலுடன் சேர்ந்து படம் முழுதும் வரும் கதாநாயகியாக நடித்து தனது முந்தைய வருத்தத்தை போக்கிக்கொள்ள இருக்கிறார் நித்யா மேனன். பிப்ரவரி மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.