ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடித்த பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை இலியானா. அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் 6 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடித்துள்ள ஏஏஏ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலியானா, கடந்த 2012ம் ஆண்டு இதே ரவிதேஜாவுடன் தேவ்டு செசினா மனசுலு என்ற படத்தில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அதே ரவிதேஜா மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுத்துள்ளேன்.
இந்த படம் தெலுங்கு சினிமாவில் நான் விட்ட இடத்தை பிடித்துத்தரும் என்று நம்புகிறேன். மேலும், ஆறு வருடங்களுக்கு முன்பு ரவிதேஜாவிடம் இருந்த எனர்ஜி இந்த படத்தில் இன்னும் அதிகரித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.