தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மகாநடி படத்தில் மறைந்த நடிகை சாவித்ரி வேடத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்ரி வேடத்தில் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால் மீண்டும் சாவித்ரியாக நடிக்க அவர் மறுத்து விட்டார்.
அவருக்கு பதிலாக நித்யா மேனன் சாவித்ரியாக நடித்து வருகிறார். என்டிஆருடன் சாவித்ரி நடித்த சில தெலுங்கு படங்களில் காட்சிகளில் சமீபத்தில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது பாலகிருஷ்ணா, நித்யாமேனன் இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சாவித்ரியாக நடிப்பது தனக்கு கிடைத்த பெருமை என்று டுவிட் செய்துள்ளார் நித்யாமேனன்.