'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லாலின் படங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் படமும், அதை தொடர்ந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான புலி முருகன் படமும் மோகன்லாலுக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையும் வசூல் மார்க்கெட்டையும் உருவாக்கி விட்டன.
அந்தவகையில் தற்போது மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிக பிரமாண்டமான ஆக்சன் படமாக உருவாகிவரும் 'ஒடியன்' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை டகுபதி பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் 'ஒடியன்' ரிலீஸாகும் அதேநாளில் அதாவது டிச-14ஆம் தேதி தெலுங்கிலும் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
கடந்தமுறை மோகன்லாலின் புலி முருகன் படம் மலையாளத்தில் வெளியான சில வாரங்கள் கழித்து தெலுங்கில் 'மான்யம் புலி' என்கிற பெயரில் வெளியாகி 50 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.