'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
மலையாள சினிமாவில் இருந்து சில குணசித்திர நடிகர்களை நம் இயக்குனர்கள் தமிழுக்கு அழைத்து வந்து அருமையான கேரக்டர்களை கொடுத்து மனதில் நிற்க வைத்துவிடுகின்றனர். அப்படி ஒருவர் தான் மலையாள நடிகரும், விக்ரம் வேதா, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவருமான ஹரீஷ் பெராடி,
'ஆண்டவன் கட்டளை'யில் பாஸ்போர்ட் மோசடிகளை கண்டுபிடிக்கும் விசாரணை அதிகாரியாக நடித்து மிரட்டிய இவர், நாளை மறுநாள் வெளியாக இருக்கும் ஆண் தேவதை படத்தில் வங்கிக்கடன் வசூலிக்கும் தாதாவாக நடித்துள்ளார். இப்படி சமீபகாலமாக கவனம் ஈர்த்து வரும் இவரை கதையின் நாயகனாக வைத்து மலையாளத்தில்'ஜனாதிபன்' என்கிற படம் தயாராகி உள்ளது.
அரசியல் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப்படத்தில் கேரள முதலமைச்சராக படம் முழுதும் வரும் மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹரீஷ் பெராடி. தன்ஷீர் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மம்முட்டி வெளியிட்டுள்ளார்.