ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரகாஷ்ராஜ் தெலுங்கில் 'ஹலோ குரு பிரேமகோசமே' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அந்தப்படத்தில் தன்னுடன் நடித்த காமெடி நடிகர் சப்தகிரியை அறைந்தார் என பரபரப்பான தகவல் வெளியானது.
அதுவும் நூறு பேருக்கு மேல் துணை நடிகர்கள் பங்கேற்று நடித்த ஒரு ரயில்வே ஸ்டேஷன் காட்சியில் தான் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பிரகாஷ்ராஜோ, அது தவறான செய்தி.. நான் ஏன் அவரை அடிக்கப்போகிறேன்..?, அவர் வளர்ந்து வரும் நடிகர், அவர் முதன்முதலாக இயக்குனராக மாறியதற்கு கூட நான் வாழ்த்து சொன்னேனே” என மறுத்துள்ளார்.
அதேசமயம், இந்தப்படத்தின் இயக்குனர் நிக்கினா திரிநாத ராவ், இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கவும் இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என மறுக்கவும் இல்லை.