'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பாலகிருஷ்ணா எந்த அளவுக்கு தனது ரசிகர்கள் மீது அன்பானவரோ அதே அளவுக்கு அவர்கள் மீது கோபத்தை காட்டிவிடும் டென்சன் பார்ட்டியும் கூட.. கடந்தவருடம் திருப்பதி தரிசனம் முடித்துவந்த அவருடன் செல்பி எடுக்க முயன்ற ஒரு ரசிகரை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது இதேபோல மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாலகிருஷ்ணா.
தெலுங்குதேசம் கட்சி ஆதரவாளர்கள் சிலரை சமீபத்தில் அவர் அடித்தார் என சொல்லப்படுகிறது. அந்த சிலரில் பாலகிருஷ்ணா ரசிகர்களும் அடக்கம். இதனால் கோபமான பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள், கம்மம் பகுதியில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவரது காரை மறித்து வருத்தம் தெரிவிக்கும்படி ஆர்ப்பாட்டம் செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..