'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மலையாளத்தில் பிஜூமேனன் நடித்த படையோட்டம் படம் வெளியானது. காலித் இப்ராஹிம் என்கிற அறிமுக இயக்குனர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு சமயம் தனது உயிரை காத்த ஒரு இளைஞனை, யாரோ ஒருவன் அடித்துவிட்டான் என தெரிந்து, அவனை பிடித்து இழுத்து வந்து மன்னிப்பு கேட்க செய்வதற்காக ஒரு தாதா மேற்கொள்ளும் பயணம் தான் இந்த படையோட்டத்தின் கதை.
ஆனால் இதை சீரியஸாக சொல்லாமல் படம் முழுக்க காமெடியாகவே படமாக்கியிருந்தார் இயக்குனர். தாதாவாக பிஜூமேனனனும் அவரது. சகாக்களாக நடித்தவர்களும் காமெடி கலந்த நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தனர். இதனால் தீவண்டி, வரதன் என இரண்டு ஹிட் படங்கள் கூடவே களத்தில் போட்டிக்கு இருந்தாலும், இந்தப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, திரையரங்குகளின் எண்ணிக்கை குறையாமல் ஓடிக்கொண்டு உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் சொல்கிறது.