இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. தமிழ் மற்றும் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலாபவன்மணி சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள். அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் எத்தனால் கலந்து கொடுத்துள்ளனர் என்று அறிவித்தனர். இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டார்கள். வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாற்றை சாலக்குடிகாரன் சங்கதி என்ற பெயரில் இயக்குனர் விநயன் திரைப்படமாக தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் கலாபவன் மணி கேரக்டரில் அவரைப்போலவே உருவ ஒற்றுமை கொண்ட ராஜாமணி என்கிற பலகுரல் கலைஞர் நடித்துள்ளார். ஹனிரோஸ் ஹீரோயியான நடித்துள்ளார். கலாபவன் மணியும், ஹனி ரோசும் தமிழில் சரித்திரம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப் படம் வெளிவரவில்லை. தற்போது படத்தின் அணைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.