மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்தியத் திரையுலகத்தில் சில நட்சத்திரக் குடும்பங்கள் உள்ளன. தமிழில் சிவாஜிகணேசன், சிவகுமார், ரஜினிகாந்த், விஜய் என ஒரு சில நட்சத்திரக் குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், ஆந்திராவில் அது கணக்கிலடங்காது. இருந்தாலும் நாகார்ஜுனா குடும்பமே நட்சத்திரக் குடும்பம் தான். அவருடைய அப்பா நாகேஸ்வரராவ் பல சாதனைகளைப் புரிந்து மறைந்த நடிகர். மகன்கள் நாகசைதன்யா, அகில் நடிகர்கள், மனைவி அமலா நடிகை, மருமகள் சமந்தா நடிகை, மற்றும் அவருடைய உறவினர்களும் நட்சத்திரக் குடும்பம்தான்.
இந்த செப்டம்பர் மாதம் நாகார்ஜுனா குடும்பத்திற்கு ஒரு கொண்டாட்டமான மாதமாக அமைந்துள்ளது. நாகசைதன்யா நடித்த 'ஷைலஜா ரெட்டி அல்லுடு' படம், சமந்தா நடித்த 'சீமராஜா, யு டர்ன்' படங்கள் கடந்த வாரம் வெளிவந்தன. அகில் நடித்து வரும் 'மிஸ்டர் மஜ்னு' படத்தின் முதல் பார்வை சில தினங்களுக்கு முன்பு வெளியானது. நாகார்ஜுனா நடித்துள்ள 'தேவதாஸ்' படம் அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது.
நேற்று நடைபெற்ற 'தேவதாஸ்' இசை வெளியீட்டு விழாவில் 'செப்டம்பர் மாதம் நம்முடைய மாதம், அதனால் எந்த கவலையும் தேவையில்லை,” என நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.