இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தமிழில் அறிமுகமான 'ஒருபக்க கதை' படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இன்னும், கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தநிலையில் மலையாளத்தில் வெளியான பூமரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் காளிதாஸ்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் ஜெயராம், பிரபல தயாரிப்பாளரும் மோகன்லாலின் நண்பருமான ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.. குறுகியகால தயாரிப்பாக உருவாகும் இந்தப்படத்திற்கு மிஸ்டர் ரவுடி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.