பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கோலமாவு கோகிலா படத்தை அடுத்து ரஜினியின் பேட்ட, கமலின் இந்தியன்-2 ஆகிய மெகா படங்களுக்கு இசையமைக்கிறார் அனிருத். அதோடு, தெலுங்கில் ஏற்கனவே பவன்கல்யாண் நடித்த அஞ்ஞானவாசி படத்திற்கு இசையமைத்த அனிருத், தற்போது நானி நடிக்கும் ஜெர்ஸி படத்திற்கும் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் நானி திரையுலகில் நடிகராகி நேற்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனால் அவருக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த அனிருத். ஜெர்சிக்கு நான் இசையமைக்கிறேன் என்ற தகவலையும் பகிர்ந்தார்.