பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பல வருடங்களுக்கு முன்பு தனது திருமணத்திற்காக சினிமாவை உதறியவர் சீனியர் நடிகை சாந்தி கிருஷ்ணா. இளமைக்காலத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கோட்டை விட்டதாலோ என்னவோ, தற்போது மலையாள சினிமாவில் பரபரவென பம்பரமாக சுழல்கிறார்
மலையாள சினிமாவில் அம்மா, அக்கா வேடங்களை குறிவைத்துள்ள 51 வயதான இவருக்கு, கடந்த வருடம், நிவின்பாலி நடித்த 'ஞண்டுகளுட நாட்டில் ஓரிடவேள' படத்தில் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு 'குட்டநாடன் மர்பாப்பா' படத்தில் குஞ்சாக்கோவின் அம்மாவாக, 'அரவிந்தண்டே அதிதிகள்' வினீத் சீனிவாசனின் அம்மாவாக நடித்தார்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் நிவின்பாலி நடிக்கும் மைக்கேல் படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக மஞ்சிமா நடிக்கும் இந்தப்படத்தை தி கிரேட் பாதர் இயக்குனர் ஹனீப் அதேனி இயக்குகிறார்.