ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தான் நடித்து வந்த காயம்குளம் கொச்சுன்னி மற்றும் மூத்தோன் ஆகிய படங்களை முழுதுவமாக முடித்துக்கொடுத்து விட்ட நிவின்பாலி, நயன்தாரா ஜோடியாக லவ் ஆக்சன் டிராமா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துள்ள நிலையில் தற்போது மைக்கேல் என்கிற படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்த புதிய படம் இன்று எர்ணாகுளத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. மம்முட்டி நடித்த தி கிரேட் பாதர் படத்தை இயக்கி, சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஹனீப் அதேனி தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படம் பேமிலி திரில்லராக உருவாக்கவுள்ளதாம். இதற்கு முந்தைய இரண்டு படங்களிலும் கெட்டப்பை மாற்றி நடித்த நிவின்பாலி இந்தப்படத்திற்காக ஸ்டைலான லுக்கிற்கு மாறியுள்ளார்.