ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரி கிருஷ்ணா இன்று காலை கார்விபத்தில் பலியான சம்பவம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நலம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ரசிகர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு ஹரிகிருஷ்ணா மரணமடைந்தார்.
இதேப்போல கடந்த 2014, டிசம்பர் மாதம், இவரது மூத்த மகன் ஜானகிராமும் இதேபோன்ற கார் விபத்தில் தான் மரணமடைந்தார். இரண்டு பேர்களின் கார்களும் வெவ்வேறு என்றாலும் இரண்டுக்குமே அவர்களின் குடும்ப ராசி எண்ணனான 2323 என்பது தான் பதிவெண் ஆகும்.
2009 மார்ச்சில் தெலுங்குதேசம் கட்சியின் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட நடிகர் ஜூனியர் என்.டி ஆரும் கார் விபத்தில் சிக்கி மிகப்பெரிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஜூனியர் என்.டி.ஆர் குடும்பத்தினர் இப்படி தொடர்ந்து கார்விபத்தில் சிக்குவது ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறது.