துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள படம் யுடர்ன். கன்னடத்தில் வெளியான அதே பெயரில் மீண்டும் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சமந்தாவுடன் ஆதி, பூமிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
மேலும், இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து படம் செப்டம்பர் 13-ந்தேதி ரிலீசுக்கு தயாராகி விட்டது. தெலுங்கைப்பொறுத்த வரை அதே நாளில் சமந்தவின் கணவரான நாக சைதன்யா நடித்துள்ள சைலஜா ரெட்டி அல்லுடு என்ற படமும் வெளியாகிறதாம். முன்னதாக இந்தப்படம் ஆக., 31-ல் வெளியாக வேண்டியது. ஆனால் இறுதிக்கட்ட பணிகள் முடியாததால் படம் செப்., 13-ம் தேதிக்கு தள்ளிப்போய் உள்ளதாக தெரிகிறது.
இதனால் கணவர் படத்துடன் மோத வேண்டாம் என்று நினைக்கும் சமந்தா, தனது யுடர்ன் தெலுங்கு படத்தை வேறு தேதியில் வெளியிடலாம் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து சமந்தா இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.