கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கடந்த 2012ல் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அந்தால ராட்சஷி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் லாவண்யா திரிபாதி. தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த இவர், மாயவன் படத்திலும் கதாநாயகியாக நடித்து தமிழில் தனது இருப்பை காட்டினார்..
அதேசமயம் தெலுங்கில் இந்த வருடம் வெளியான இரண்டு சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்க வேண்டிய வாய்ப்பையும் இவர் தவற விட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதில் ஒன்று தான் தொலி பிரேமலா. இதில் இவர் நடிப்பதாக இருந்து, பின்னர் விலகிக்கொள்ள அந்த வாய்ப்பு ராஷி கண்ணாவுக்கு சென்று அவருக்கு வாழ்க்கை கொடுத்தது.
அதேப்போல கடந்த வெள்ளியன்று வெளியான கீதா கோவிந்தம் படத்திலும் முதலில் ஒப்பந்தமானவர் லாவண்யா தான். அதன்பின் சில காரணங்களால் படத்தில் இருந்து விலக, அவருக்கு பதிலாக ராஷ்மிகா நடித்தார். படம் இப்போது செம ஹிட்..
அவ்வளவு ஏன் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரௌடிதான்' படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக முதலில் லாவண்யா.திரிபாதி தான் நடிப்பதாக இருந்ததாம்..