ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி படத்தின் முதல் பாகத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்ட பிரபாஸ், இரண்டாம் பாகம் வெளியான பின் சின்ன குழந்தைகளுக்கு கூட பிடித்த நடிகராகி விட்டார். அந்தவிதமாக தனது தீவிர ரசிகரான சிறுவன் ஒருவனின் ஆசையை நிறைவேற்றி அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த சிறுவன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறான். இந்தநிலையில் பிரபாஸை காண வேண்டும் என்கிற தனது ஆசையை ஒரு அட்டையில் எழுதி வெளிப்படுத்த, அது முகநூல் வைரலாகி கடைசியில் பிரபாஸுக்கும் அந்த செய்தி சென்று சேர்ந்தது. உடனே அந்த சிறுவனை அழைத்து வர ஏற்பாடு செய்து அவனை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்துள்ளார் பிரபாஸ்.