பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த முதல் படமான ஆதி சூப்பர்ஹிட் படமாக அமைந்து, வசூலில் 50 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது.. இதனையடுத்து தற்போது திலீப்பை வைத்து ராம்லீலா என்கிற ஹிட் படத்தை கொடுத்த அருண்கோபி டைரக்சனில் 21-ம் நூற்றாண்டு என்கிற படத்தில் நடித்து வருகிறார்..
ஆதி படத்தில் பிரணவுக்கு ஜோடி இல்லை. ஆனால் இந்தப்படம் ரொமான்ஸ் கலந்த ஆக்சன் த்ரில்லராக உருவாகி வருவதால், இதில் பிரணவுக்கு ஜோடியாக புதிய கதாநாயகி வேட்டை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மாடல் அழகியான ரேச்சல் டேவிட் என்பவர் பிரணவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.