ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
கடந்த மாதம் மை ஸ்டோரி மற்றும் கூடே என பிருத்விராஜ் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகின. இதில் மை ஸ்டோரி வந்த சுவடே தெரியாமல் வெளியேற, அஞ்சலி மேனனின் டைரக்சனில் வெளியான கூடே மட்டும் ஓரளவு வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்தநிலையில் வரும் செப்-6 ஆம் தேதி பிருத்விராஜ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரணம் படம் வெளியாக உள்ளது.
சொல்லப்போனால் இந்தப்படம் கூடே மற்றும் மை ஸ்டோரி ஆகிய படங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது. முற்றிலும் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இஷா தல்வார் கதாநாயாகியாக நடிக்க, நடிகர் ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஏற்கனவே பிருத்விராஜ் - நிவின்பாலி ஆகியோரை வைத்து இவிடே படத்தை இயக்கிய நிர்மல் சஹாதேவ் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து பிருத்விராஜ் நடித்துள்ள ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளதால், பிருத்விராஜின் ரசிகர்கள் இந்தப்படததை ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.