வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் பிருத்விராஜ் தனது முதல் படமாக மோகன்லால் நடிக்கும் லூசிஃபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். விவேக் ஓபராய், மஞ்சு வாரியார் மற்றும் தனது அண்ணன் இந்திரஜித் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை இந்தப்படத்திற்காக சேர்த்திருந்தாலும், ஆரம்பத்தில் இருந்தே, தான் இந்தப்படத்தில் நடிக்கப் போவதில்லை என பிருத்விராஜ், கூறி வந்தார்.
பிருத்விராஜ் நடிக்க வந்த இத்தனை வருடங்களில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் கூட அவர் இணைந்து நடித்ததே இல்லை. அப்படி நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவும் கூட. அதனால் தற்போது தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம். அதனால் தான் இயக்கிவரும் லூசிஃபர் படத்தில் இடம்பெறும் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் அவரே நடிப்பதாக முடிவு செய்துள்ளாராம்.