இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மோகன்லால் தற்போது மலையாளத்தில் பிரமாண்டமாக தயாராகிவரும் 'ஒடியன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கிவரும் இந்தப்படத்தின் கதை பற்றியும், மோகன்லால் கேரக்டர் பற்றியும் பலரும் விரிவாக தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தப்படத்தின் கதையை தேசிய விருது பெற்ற கதாசிரியரான ஹரி கிருஷ்ணன் எழுதியுள்ளார். ஒடிவியா என்கிற பிளாக் மேஜிக்கை பற்றியும் ஒடிவியன் என்கிற மக்களை பற்றியும் பின்னணியாக கொண்டு இந்தப்படம் உருவாகிறது. நம் ஊர்களில் மின்சாரம் வருவதற்கு முன்பு வாழ்ந்த ஒடியன்கள் என்பவர்களை பற்றிய கதை தான் இது.
இந்தப்படத்தில் ஒடியன் மாணிக்யன் என்கிற பிளாக் மேஜிசியனாக நடித்துள்ள மோகன்லால், தனது எதிரிகளை தாக்குவதற்காக, அவ்வப்போது வெவ்வேறு விதமான மிருகங்களின் உருவத்தில் மாறுகிறார் என்பது தான் இந்தப்படத்தின் ஹைலைட்டாம்.
இப்படியெல்லாம் கூட நடக்குமா என்கிற கேள்விக்கே இடம் தராமல் திரைக்கதையை வலுவாக்கி இருக்கிறாராம் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன். அதற்கேற்ற மாதிரி ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் பங்கும் இந்தப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்கிறார்கள்.