ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பிசியாக நடித்து வருகிறார் ஸ்ரேயா. தமிழில் நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஹிந்தியில் பிரகாஷ்ராஜின் டட்கா படத்தில் நடிப்பவர், தெலுங்கில் நாரா ரோஹித்துடன் வீர போஜ வசந்த ராயலு மற்றும் தேஜா இயக்கும் படம் உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து, கருட வேகா படத்தைத் தொடர்ந்து டாக்டர் ராஜசேகர் - காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஸ்ரேயா. அவே படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்குகிறார். இதில், ஸ்ரேயா, ராஜ சேகருடன் மோதும் அதிரடி வில்லியாக நடிக்கிறாராம். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.