விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ், டிவி சேனல் ஒன்றின் நிருபரான சுப்ரியா மேனனை சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலங்ரிதா என்கிற பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. தற்போது பிருத்விராஜ் சொந்தமாக தொடங்கிய பட தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வரும் சுப்ரியா, அதன்மூலம் பிருத்விராஜ் நடிக்கும் 9 (நைன்) என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்தநிலையில் சுப்ரியா மேனனின் பிறந்தநாளான நேற்று, அதை விமரிசையாக கொண்டாட நினைத்தார் பிருத்விராஜ். தான், தற்போது மோகன்லாலை வைத்து இயக்கிவரும் லூசிபர் படப்பிடிப்பு தளத்திற்கு சுப்ரியாவை அழைத்து சென்ற பிருத்விராஜ், அங்கிருந்த ஜாம்பவான்களான மோகன்லால், இயக்குனர் பாசில் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்ட வைத்து சுப்ரியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளார்