Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

படிப்புக்காக மீன் விற்ற மாணவி நடிகை ஆனார்

29 ஜூலை, 2018 - 12:05 IST
எழுத்தின் அளவு:
student-henan-got-cinema-chance

கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி ஹனன். இவரது தந்தை மது பழக்கத்தால் குடும்பத்தை கைவிட்டவர், தாய் மனநிலை சரியில்லாதவர். இதனால் ஹனன் தான் படிப்பதற்கும், தன் சகோதர, சகோதரிகள் படிப்பதற்கும், குடும்பத்தை காப்பாற்றவும் கல்லூரி நேரம்போக மீதி நேரங்களில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இது கேரள பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. அவர் மீன் விற்கும் வீடியோ வைரலாக பரவியது.

ஹனனை பாராட்டியும், அவர் விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார் என்றும் இருதரப்பு வாதங்கள் இணைய தளங்களில் வெளியானது. ஆனால் கேரள அரசு ஹனன் பக்கம் நின்று அவருக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்தது. இதனால் ஹனன் இன்னும் பிரபலம் ஆனார். இப்போது அவருக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்திருக்கிறது.


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மகன் பிரணவ் நடிக்கும் படத்தில் ஹனன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதனை படத்தின் இயக்குனர் அருண் கோபி அறிவித்துள்ளார். "ஹனனுக்கு எதிரான விமர்சனங்கள் அவரை அடித்துக் கொல்வதற்கு சமமானது. அவருக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையிலேயே அவரை என் படத்தில் நடிக்க வைக்கிறேன். தொடர்ந்து நடிப்பது பற்றியும், படிப்பது பற்றியும் அவரே முடிவு செய்வார்" என்கிறார் இயக்குனர் அருண் கோபி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in