டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜிகர்தண்டா மற்றும் நானும் ரௌடி தான் ஆகிய இந்த இரண்டு படங்களையும் மிக்ஸ் செய்து புதிதாக ஒரு கேங்ஸ்டர் படம் எடுத்தால் எப்படி இருக்கும்..? அதைத்தான் தற்போது மலையாளத்தில் பிஜூமேனன் நடிப்பில் உருவாகி வரும் படையோட்டம் படத்தில் பார்க்கப் போகிறீர்கள் என்கிறார்கள் படக்குழுவினர்..
சமீபத்தில் பிருத்விராஜ் வெளியிட்ட இந்தப்படத்தின் டீசரும் அதைத்தான் சொல்லாமல் சொல்கிறது.. அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கபாலி ரஜினியின் புகைப்படத்தை வைத்து படத்தின் மீதான ஆவலை தூண்டியுள்ளார்கள்.
மளமளவென சோலோ ஹீரோவாக வளர்ந்து வந்த பிஜுமேனனனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக சொல்லிக்கொள்ளும்படியாக ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. அதை இந்த படையோட்டம் தீர்த்துவைக்கும் என அடித்து சொல்கிறார் படத்தின் இயக்குனர் ரபீக் இப்ராஹீம்
இன்னொரு சிறப்பம்சமாக 'ராஜமாணிக்கம்' படத்தில் மம்முட்டி பேசி நடித்ததுபோல இந்தப்படத்தில் தனது கேரக்டருக்காக திருவனந்தபுரம் பாஷையில் பேசி நடித்துள்ளாராம் பிஜூமேனன். வரும் ஓணம் பண்டிகையில் இந்தப்படம் ரிலீஸாக உள்ளது.