பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் குறிப்பாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நேரம் தவிர மற்றபடி பெரும்பாலும் மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கியே இருக்கிறார் நடிகர் விநாயகன். தமிழில் விஷால் நடித்த 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக முக்கிய வேடத்தில் நடித்த விநாயகன், தற்போது மலையாள சினிமாவில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் தான் திரையுலகை சேர்ந்த எந்த சங்கங்களிலும் உறுப்பினராக இல்லை என்கிறார் நடிகர் விநாயகன். அதனாலேயே சமீப நாட்களாக மலையாள நடிகர் சங்கத்தில் நடந்து வரும் அமளியில் எல்லாம் சிக்காமல் ஒதுங்கியே நிற்கிறார்.
அதேசமயம் மலையாள திரையுலகை உலுக்கிய நடிகை கடத்தல் விஷயத்தில் தான் எப்போதும் பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் நிற்பதாகவும் விநாயகன் கூறியுள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையென்றாலும், திரையுலக நிகழ்வுகளில் ஒரு நடிகராக கலந்து கொண்டு தனது பங்களிப்பை தந்து வருகிறார் விநாயகன்.