இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் இருந்தாலும் சமீப காலமாக நடிகர் துல்கர் சல்மான் ஏற்று நடித்து வரும் வேடங்கள் எல்லாம் அவர் ரசிகர்களை விட்டு தூரமாகவே இருப்பது போன்றே அமைந்து இருந்தன. அவர், நடித்த காம்ரேட் இன் அமெரிக்கா, சோலோ, மகாநதி ஆகிய படங்களில் ரசிகர்களின் மனதை தொடும் விதமாக அவரது நடிப்பு இருந்தாலும், அவரது கேரக்டர்கள் அந்த விதமாக இல்லை.
அந்த குறையை போக்கும் விதமாக தற்பொழுது அறிமுக இயக்குனரான நவ்பல் என்பவர் இயக்கிவரும் ஒரு யமண்டன் பிரேமகதா என்கிற படத்தில் ஒரு சாதாரண பெயிண்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.
விஜய்யின் ப்ரெண்ட்ஸ் படத்தில் வருவது போல பெயிண்ட் அடிக்க போன இடத்தில் துல்கருக்கு காதல் வருவதும், அதை தொடர்ந்து நிகழும் நகைச்சுவை நிகழ்வுகளுமே மொத்த படம் என்கிறார்கள் கதாசிரியர்கள் உன்னி கிருஷ்ணனும், பிபின் ஜார்ஜும்.